ஈரோடு இடையன்காட்டுவலசு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 1991&99ல் பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் 3வது சந்திப்பு நடந்தது. மறைந்த தலைமை ஆசிரியர் மு.தமிழ்மணி மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு மலர் தூவி, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் 11 ஆசிரியர்கள், 47 முன்னாள் மாணவ, மாணவிகள் மற்றும் குடும்பத்தினர் என 120க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள், பாடல், நடனம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு அட்சயரங்கன் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக 2012, 2019ல் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. சகானா நன்றி கூறினார்.



