அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் நாட்டுநலப் பணித்திட்டம், பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் நேருநகர் லயன்ஸ் சங்கம் இணைந்து மாணவிகளுக்கு காது, மூக்கு, தொண்டை, தோல் நோய், மகளிர் மருத்துவம் மற்றும் பொதுமருத்துவ முகாம் இன்று (23ம் தேதி) காலை 10 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு பன்னாட்டு லயன்ஸ் 3242 சி மாவட்ட முதலாம் துணை ஆளுநர் வழக்கறிஞர் சூரி நந்தகோபால், நாட்டு நல பணித்திட்ட ஆலோசகர் கனகசுப்பிரமணியம் ஆகியோர் தலைமை தாங்கினர். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராதா உதவி ஒருங்கிணைப்பாளர் லிடியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் ஜி.எம்.டி ஒருங்கிணைப்பாளர் லயன் செந்தில் குமார், மகளிர் தினம் மாவட்ட தலைவர் சுப்பு செந்தில்குமார், பிஎஸ்ஜி மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன், நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் செயலாளர் செந்தில்குமார், எல்.சி.ஐ எஃப் சிவக்குமார் மற்றும் லயன்ஸ் சங்கத்தினர், பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாக மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.



