சைமா பருத்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் 51வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. இதைத்தொடர்ந்து நடந்த முதல் கவுன்சில் கூட்டத்தில், 2026-27ம் ஆண்டுக்கான தலைவராக சிவா டெக்ஸ் யார்ன் நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.கே.சுந்தரராமன் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக பல்லவா டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குனர் துரை பழனிசாமியும், உபதலைவராக சுலோச்சனா காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் நிர்வாக இயக்குனர் எஸ்.கிருஷ்ணகுமாரும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.
டாக்டர் சுந்தரராமன், சைமா முன்னாள் தலை வர் ஆவார். துரை பழனிசாமி தற்போது சைமா தலைவராக வும், கிருஷ்ணகுமார் துணைத்தலைவராகவும் உள்ளனர்.



