சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தின் ஊட்டி கிளை 25 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்து வெள்ளிவிழா கொண்டாடியது.
2001ல் தொடங்கப்பட்ட இக்கிளை, சிறு வணிகர்கள், சுயதொழில் செய்வோர், முதல் முறையாக கடன் பெறுவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு நிதி சேவைகளை வழங்கி வருகிறது.
விழாவில், சுந்தரம் பைனான்ஸ் தமிழ்நாடு பிராந்திய தலைவர் மற்றும் முதுநிலை துணைத்தலைவர் ராஜேஷ் வெங்கட் பேசுகையில், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும், பணியாளர்களின் அர்ப்பணிப்பும் கிளையின் 25 ஆண்டு பயணத்திற்கு முக்கிய காரணம், என்றார். கிளை மேலாளர் எஸ்.வி.ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பணியாளர்களின் குடும்பத்தினருக்கு பாராட்டு கடிதங்கள் வழங்கப்பட்டன.



