Homeபிற செய்திகள்தொழில்துறை கல்வித்துறையை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா, எல் அண்ட் டி ஒப்பந்தம்

தொழில்துறை கல்வித்துறையை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா, எல் அண்ட் டி ஒப்பந்தம்

கோவை துடியலூர் அருகே வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் மற்றும் எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ. சௌந்தரராஜன் வரவேற்றார். எஸ் என் ஆர் சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராம கிருஷ்ணன் தலைமை வகித்தார். எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ் துணை தலைமை தொழில்நுட்ப அதிகாரி பியூஷ் ஜெயின் சிறப்புரையாற்றினார்.
எல் அண்ட் டி நிறுவனத்தின் புதுமை மற்றும் தொழில்நுட்ப உத்தி பிரிவு தலைவர் விஜய் மந்த்ரி, உலகளாவிய பொறியியல் பிரிவு தலைவர் டாக்டர் கோட்டூர், தொழில்நுட்ப மேலாளர் அனிஷ் பங்கேற்றனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி முதல்வர் டாக்டர் டேவிட் ரத்னராஜ் நன்றி கூறினார். நிகழ்வை கோலபோரே டிவ் இன்னோவேஷன் சென்டர் உறுப்பினர்களான டாக்டர் ரவீன், டாக்டர் அனுராதா ஒருங்கிணைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img