கோவை ரத்தினபுரி வ.உ.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மனைவி கலை வாணி. இந்தத் தம்பதியருக்கு தன்வந்த் என்ற ஒரு வயதே ஆன ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில், நேற்று குழந்தை தன்வந்த் வழக்கம்போல் தனது வீட்டின் முன்பகுதியில் விளையாடிக் கொண்டிருந் துள்ளது. வீட்டின் அருகே தரையோடு தரையாக அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டி, மேல்பகுதி முழுமையாக மூடப்படாமல் வெறும் தகரத்தைக் கொண்டு தற்காலிகமாக அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
விளையாடிக் கொண்டி ருந்த குழந்தை, எதிர்பாராத விதமாக அந்தத் தகரத்தின் மீது ஏறியபோதோ அல்லது நகர்த்தியபோதோ நிலைதடுமாறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்துள்ளது.
நீண்ட நேரமாக வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் சத்தம் திடீரென கேட்காததால் சந்தேகமடைந்த பெற்றோர், வெளியே வந்து தேடியுள் ளனர்.
எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால், சந்தேகத்தின் பேரில் வீட்டின் முன் இருந்த தண்ணீர் தொட்டியைத் திறந்து பார்த்துள்ளனர்.
அப்போது குழந்தை தண்ணீருக்குள் மூழ்கி இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். உடனடியாக பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத் தினர் குழந்தையை தொட்டியிலிருந்து வெளியே மீட்டனர்.
எனினும், குழந்தை பேச்சு மூச்சின்றி மயங்கிய நிலையில் காணப்பட்டது. இதனால் பதறிப்போன பெற்றோர், குழந்தையை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த ரத்தினபுரி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, குழந்தையின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, அசம்பாவிதம் எவ்வாறு நடந்தது என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்றோரின் சிறு கவனக்குறைவாலும், சரியாக மூடப்படாத தண்ணீர் தொட்டியாலும் ஒரு வயதே ஆன குழந்தை பரிதாபமாக உயிரிழந்த இச்சம்பவம், அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



