Homeபிற செய்திகள்ஆகஸ்டில் கியா விற்பனை 48.1 சதவீதம் உயர்வு

ஆகஸ்டில் கியா விற்பனை 48.1 சதவீதம் உயர்வு

கியா இந்தியா நிறுவனம், ஆகஸ்டில் 29,042 வாகனங்களை விற்பனை செய்து, மாதாந்திர விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் 19,608 வாகனங்கள் விற்பனையான நிலையில், தற்போது 48.1 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2026 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 2,20,991 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில் 1,83,882 வாகனங்கள் விற்பனையான நிலையில், 20.1 சதவீதம் வளர்ச்சி பதிவாகியுள்ளது. செல்டோஸ், சோனெட் மாடல்கள் விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சியரோஸ் மின்சார வாகனத்துக்கும் வரவேற்பு அதிகரித்துள்ளது. புதிய சொரென்டோ ஹைபிரிட் எஸ்யூவி செப்.4-ல் இந்தியாவில் அறிமுகமாகிறது.

படிக்க வேண்டும்

spot_img