Homeபிற செய்திகள்ரோட்டரி சங்கம் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு 3 பிரத்யேக பிளாஸ்டிக் பாட்டில் சேகரிப்பான்கள் வழங்கல்

ரோட்டரி சங்கம் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு 3 பிரத்யேக பிளாஸ்டிக் பாட்டில் சேகரிப்பான்கள் வழங்கல்

தூத்துக்குடி நகரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தவும், பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்தவும் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் ட்ரெயில் பிளேசர்ஸ் ரோட்டரி கிளப் ஆஃப் தூத்துக்குடி, அமைப்பு சார்பில் மாநகராட்சிக்கு 3 பிரத்யேக பிளாஸ்டிக் பாட்டில் சேகரிப்பான்கள் நிறுவப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் எஸ். பிரியங்கா கலந்துகொண்டு பிளாஸ்டிக் பாட்டில் சேகரிப்பான்களைப் பெற்றுக்கொண்டார்.
பொதுமக்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களை ஆங்காங்கே வீசுவதைத் தடுத்து, அவற்றை முறையாகச் சேகரித்து மறுசுழற்சி செய்வதற்கும், தூய்மையான மற்றும் பசுமையான தூத்துக்குடியை உருவாக்குவதற்கும் இத்திட்டம் பெரிதும் உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வை ரோட்டரி கிளப் ஆஃப் ட்ரெயில் ப்ளேசர்ஸ் தூத்துக்குடி தலைவர் எம்.திவ்யா பிரைட்லின், செயலாளர் டாக்டர் ரஜினி டாட்டியா மற்றும் பொருளாளர் ராஜீவி மோகன்ராஜ் ஆகியோர் முன்னின்று ஒருங்கிணைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி நகர்நல அலுவலர் கணேஷ், கிழக்கு மண்டல சுகாதார அலுவலர் ஹரிகணேஷ், உதவியாளர் முத்துக்குட்டி மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img