Homeபிற செய்திகள்பிட்புல் நாய் கடித்து பெண் படுகாயம் மயக்க ஊசி செலுத்தி பிடித்த ஊழியர்கள் ராசிபுரத்தில் பரபரப்பு...

பிட்புல் நாய் கடித்து பெண் படுகாயம் மயக்க ஊசி செலுத்தி பிடித்த ஊழியர்கள் ராசிபுரத்தில் பரபரப்பு சம்பவம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தொப்பப்பட்டியைச் சேர்ந்த பரணி என்பவர் 1½ வயது பிட்புல் நாயை வளர்த்து வந்தார். அவர் வெளிநாட்டில் இருப்பதால், நாயை பராமரிப்பதற்காக நண்பர் அறிவழகன் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.


இந்நிலையில், நேற்று காலை அறிவழகன் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றிருந்தபோது, வீட்டில் தனியாக இருந்த அவரது தாயார் கவிதாவை (43), பிட்புல் நாய் திடீரென கடித்ததில் உடலின் பல்வேறு பகுதிகளில் படுகாயமடைந்தார். நாயிடம் இருந்து தப்பிக்க அவர் போராடிய நிலையில், அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டனர்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவிதாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனிடையே, நாய் மீண்டும் பொதுமக்களை கடிக்காமல் இருக்க அப்பகுதி மக்கள் அதனை சுற்றிவளைத்து கட்டுப்படுத்தினர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மயக்க ஊசி செலுத்தி பிட்புல் நாயை பாதுகாப்பாக பிடித்துச் சென்றனர்.
நண்பரின் வீட்டில் பராமரிப்பதற்காக கொண்டு வரப்பட்ட பிட்புல் நாய், அவரது தாயாரையே கடித்த சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img