கோவை வாளையார் அருகே உள்ள ஏ.ஜே.கே. கல்லூரியில் ஓணம் பண்டிகை மாணவ, மாண விகளால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் கேரள பாரம்பரிய உடையணிந்து வந்த மாணவர்கள், செண்டை மேளம் மற்றும் பேண்ட் வாத்தியங்களுடன் ஆடிப் பாடி மகிழ்ந்தனர். ராட்சத குரங்கு, ரோபோட் மனி தர்கள் உள்ளிட்டவை நிகழ்ச்சியில் இடம் பெற் றன. சுமார் 2 கி.மீ. தொலைவில் இருந்து மாணவர்கள் ஊர்வலமாக கல்லூரிக்கு வந்தனர்.
ஓணத்தை முன்னிட்டு யானையை மையமாகக் கொண்டு பிரம்மாண்ட அத்தப்பூக்கோலம் அமைக்கப்பட்டிருந்தது. மகாபலி வேடமணிந்த மாணவர், போதைப் பொருள் எதிர்ப்பு விழிப் புணர்வு பதாகையுடன் சொகுசு காரில் வலம் வந்தார்.



