கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் கோபனாரி பிரிவு ஆனைகட்டி வடக்கு சுற்று சிங்குழி கிராமம் அருகே கொடுந்தரை ஓடை அருகே ஆண் காட்டு எருமை (வயது சுமார் 12) இறந்து கிடந்தது.
தகவல் அறிந்ததும் கோவை உதவி வன பாதுகாவலர் தலைமையில் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் மற்றும் வனப்பணியாளர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அவர்கள் முன்னிலையில் காட்டெருமையின் உடல் பிரேத பரிசோதனையை வன கால்நடை மருத்துவர் டாக்டர் விஜயராகவன் நடத்தினார்.
விலங்குகளுக்கு இடையேயான மோதலே காட் டெருமை உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்துள்ளது.



