Homeபிற செய்திகள்காவேரி மருத்துவமனைகளில் வலிப்பு நோய் சிகிச்சைக்கு ஒருங்கிணைந்த கட்டமைப்பு

காவேரி மருத்துவமனைகளில் வலிப்பு நோய் சிகிச்சைக்கு ஒருங்கிணைந்த கட்டமைப்பு

காவேரி மருத்துவமனை குழு மம் சார்பில், சென்னையில் உள்ள 3 மருத்துவமனைகளிலும் ஒருங்கி ணைந்த மண்டல வலிப்பு நோய் சிகிச்சை மையங்கள் (ரி-ஸிணிசி) தொடங்கப்பட்டுள் ளன. நரம்பியல் நிபுணர்கள் தலைமையில் செயல்படும் இம்மையங்களில், மூளை கதிர்வீச்சியல், நரம்பு மின்னியல், மருத்துவ உளவியல், மறுவாழ்வு சிகிச்சை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு துறை நிபுணர்கள் ஒருங்கிணைந்து சிகிச்சை அளிக்க உள்ளனர்.


இது குறித்து மூளை மற்றும் தண்டுவட சிகிச்சை மையத்தின் இயக்குநர் டாக்டர் கிரிஷ் ஸ்ரீதர் கூறுகையில், “வலிப்பு நோயைத் துல்லியமாகக் கண்டறிந்து வகைப்படுத்துவதிலேயே சிகிச்சையின் வெற்றி அடங்கியுள்ளது,” என்றார்.
செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ், “ரி-ஸிணிசி அமைப்பின் தொடக்கமானது, சென்னை மாநகரத்தில் வலிப்பு நோய்க்கு விரிவான சிகிச்சை வழங்குவதை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்,” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img