Homeபிற செய்திகள்சின்னாளபட்டியில் ஏ.ஆர்.எம். கிராண்ட் பேலஸ் திருமண மண்டபம் திறப்புவிழா

சின்னாளபட்டியில் ஏ.ஆர்.எம். கிராண்ட் பேலஸ் திருமண மண்டபம் திறப்புவிழா

சின்னாளபட்டி பைபாஸ் ரோட்டில், புதிதாக கட்டப்பட்ட ஏ.ஆர்.எம்., கிராண்ட் பேலஸ் அண்டு சூட்ஸ் ஏ.சி. மற்றும் திருமண மண்டப திறப்பு விழா நடைபெற்றது. ஏ.ஆர்.எம்., கிராண்ட் பேலஸ் உரிமையாளர் கள் முருகேசன், அட்சயா, ராமச்சந் திரன், முத்துலட்சுமி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.


முதல் நிகழ்ச்சியாக முருகேசன் -அட்சயா தம்பதியினரின் குழந்தை மகாஸ்ரீயின் காதணி விழா நடைபெற்றது. உறவினர்கள், சீர்வரிசையில் கன்றுடன் கூடிய காங்கேயம் பசு, ஆடு மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள், மின் சாதனங்கள் வழங்கி மகாஸ்ரீயை வாழ்த்திச் சென்றனர்.


ஏ.ஆர்.எம்., கிராண்ட் பேல ஸின் சிறப்பம்சங்கள் குறித்து உரிமையாளர் முருகேசன் கூறுகையில், ‘சின்னாளபட்டி பைபாஸ் சாலையில் மதுரை & திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே எங்களது திருமண மண்டபம் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. சின்னாளபட்டி மட்டுமின்றி திண்டுக்கல், கொடைரோடு, வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், அம்மையநாயக்கனூர், நிலக் கோட்டை ஆகிய ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சின்னாளபட்டியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தங்கள் இல்ல விழாக்களை நடத்த வசதியாக எங்கள் திருமண மண்டபம் அமைந்துள்ளது என்றார்.


குறிப்பாக ஏ.ஆர்.எம்., கிராண்ட் பேலஸில் வாகனங்கள் நிறுத்தும் வசதிக்காக இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் கார் பார்க்கிங் உள்ளது. பிரம்மாண்டமான ஜெனரேட்டர், மண்டபத்திற்கு வரும் மக்களுக்கு பாதுகாப்பான குடி தண்ணீர், மணமகன் – மணமகளுக்கென பிரத்யேகமான அறை உட்பட அனைத்து பகுதிகளிலும் ஏ.சி. வசதி உள்ளது. 2-வது தளத்தில் டீலக்ஸ் ஏ.சி. அறைகள் உள்ளன. இவற்றை திருமணத்திற்கு வரும் உறவினர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வசதி உள்ளது. முதல் நிகழ்வாக எங்களது குடும்ப நிகழ்ச்சியை வைத்துள்ளோம்.


தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் இல்ல விழாக்களை நடத்தி மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் என்றார்.
திறப்புவிழாவில் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பிள்ளையார்நத்தம் முருகேசன், திண்டுக்கல் நம்ம பிரியாஸ் உரிமையாளர் மற்றும் காந்திகிராமம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தொழிலதிபருமான டி.ஜெயராமன், பொறியாளர் பிரேம்குமார், அக்ரி கோபால், தேவர் பேரவையைச் சேர்ந்த பி.எஸ்.சேகர், கலைச்செல்வம், கோடீஸ்வரன், திரைப்பட நடிகர் ஆட்டோகிராப் அலெக்ஸ், செந்தில் மாயத்தேவர், திவ்யா ஸ்டுடியோ உரிமையாளரும், சின்னாளபட்டி வட்டார திருமண மண்டபம் உரிமையாளர் சங்க தலைவர் சாமியார்பட்டி சந்திரசேகரன், ராஜநிதி டிரேடர்ஸ் ராஜேஸ்கண்ணா, சின்னாளபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் பிரதீபாகனகராஜ், துணைத் தலைவர் ஆனந்தி பாரதிராஜா, முன்னாள் திமுக பொருளாளர் ஓ.பால்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கருப்பையா, சிவக்குமார், திண்டுக்கல் மாவட்ட திருமண மண்டப உரிமையாளர் சங்க செயலாளர் சுதாகர், வணிகர்சங்கம் சந்தானம், சின்னாளபட்டி வட்டார திருமண மண்டப உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img