பவானி காலிங்கராயன் பாளையத்தில் இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தி காலிங்கராயன் பசுமை மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட எல்லையான பவானி லட்சுமி நகரில் தொடங்கி வாசவி கல்லூரி வரையில் 5 கி.மீ. தொலைவுக்கும், சித்தோடு நால்ரோடு வரையில் 10 கி.மீ. தொலைவுக்கும் என இரு பிரிவுகளாக நடத்தப் பட்டது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் விஜயகுமார் மற்றும் பவிஷ்பார்க் நல்லசிவம் தலைமையில் நடை பெற்றது. போட்டி களை எக்சல் கல்லூரி நிர்வாகி மதன்குமார் மற்றும் எஸ்விஎன் பள்ளி முதல்வர் தர்மராஜ் கொடியசைத்து தொடக்கிவைத்தனர். இதில், ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் என ஆறு பிரிவுகளில் பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
காலிங்கராயன் வாய்க்கால் பாசனம், இயற்கை யைக்காப்போம், மரங்களை வளர்ப்போம், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம், பசு மையை பாதுகாப்போம் எனும் தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், வெற்றிபெற்றவர்களுக்கு தமாகா மாநில துணைத் தலைவர் விடியல் சேகர் பரிசு வழங்கி, பாராட்டு தெரிவித்தார். மாநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



