Homeபிற செய்திகள்இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் சுதந்திர தின விழா

இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் சுதந்திர தின விழா

இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் சுதந்திர தின விழா கோவை ராக்கியாபாளையத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. நிறுவன நிறுவனர் இந்திரா சுந்தரம் தலைமை வகித்தார். செயலாளர் ராஜா முகமது முன்னிலை வகித்தார்.
விழாவில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, சமாதானத்தின் அடையாளமாக புறாக்கள் பறக்க விடப்பட்டன. தொடர்ந்து விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் முன்னாள் மேயர் விசாலாட்சி, தொழிலதிபர்கள் தங்கவேல் பழனிச்சாமி, சக்சம் ரத்தினசாமி, வக்கீல் சுவாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொண்டு நிறுவன நிர்வாகிகள் விஜயலட்சுமி, சேக், சாந்தி, அய்யாசாமி, சதீஷ்குமார், அபு, சித்ரா உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img