கோவை சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் 10-வது ஆண்டு தடகளப் போட்டி, நேரு விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 17 முதல் 19-ம் தேதி வரை நடக்கிறது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

12, 14, 17, 19 வயதுக்குட்பட்டோருக்கான ஓட்டப்பந்த யம், களப்போட்டிகள் உள்ளிட்ட தடகளப் போட்டிகளும், 6 முதல் 10 வயது சிறார்களுக்கான ‘கிட்டீஸ் மீட்’ நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

தொடக்க விழாவில் கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர் என்.கண்ணன் தேசியக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பு, இசைக்குழு, ஒலிம்பிக் ஜோதி ஏற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.



