Homeபிற செய்திகள்பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் அறிமுகவிழா

பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் அறிமுகவிழா

கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் (றிஷிநி ஜிமீநீலீ) 2026&27-ஆம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு பி.இ. மற்றும் பி.டெக். மாணவர் களுக்கான அறிமுக நிகழ்ச்சி கல்லூரி நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவின் மத்திய துறைமுகங் கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை துறைமுக ஆணையத்தின் தலைமை லஞ்ச ஒழிப்பு அதிகாரி பி.அனுக்ரஹா, ஐ.ஏ.எஸ். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மேலும், இவர் இக்கல்லூரியின் முன்னாள் மாணவி (பி.இ. ணிசிணி, 2008-ஆம் ஆண்டு பயின்றவர்) ஆவார். நிகழ்ச்சிக்குக் கல்லூரி முதல்வர் (முழு கூடுதல் பொறுப்பு) முனைவர் ஜி.திலகவதி தலைமை தாங்கினார். முன்னதாக, இறைவணக் கத்துடன் தொடங்கிய இந்நிகழ்ச் சியில், பிஎஸ்ஜி & சன்ஸ் அறக்கட்டளையின் 100 ஆண் டுகாலச் சமூகப் பங்களிப்பை விளக்கும் காணொளி திரையிடப் பட்டது. சிறப்பு விருந்தினர் பி.அனுக்ரஹா ஐ.ஏ.எஸ். பேசுகையில், “மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் நிச்சயமற்ற சூழல்களை எதிர்கொள்ளும் பக்குவத்தையும், சவால்களிலிருந்து மீண்டெழும் மன உறுதியையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். தங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதைத் தவிர்த்து, தனித்துவமான திட்டங்களை வகுத்துக்கொண்டு கடினமாக உழைக்க வேண்டும். எதிர்கால வளர்ச்சிக்கு பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி மிகச் சிறந்த அடித்தளத்தை வழங்கும். மாணவர்கள் இணையப் பாதுகாப்பு, உடல் மற்றும் மன நலம் பேணல் மற்றும் நிதி மேலாண்மை ஆகியவற்றில் போதிய விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்,” என்றார்.
கல்லூரி முதல்வர் முனைவர் ஜி. திலகவதி பேசுகையில், “பிஎஸ்ஜி அறக்கட்டளையின் 100-வது ஆண்டு மற்றும் கல்லூரியின் 75-வது பவள விழா ஆண்டில் இணைந்துள்ள புதிய மாணவர்களை வரவேற்கிறோம். மாணவர்கள் வகுப்பறைப் பாடங்களோடு நின்றுவிடாமல், சுய கற்றல் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். கல்லூரியில் உள்ள சிறப்பு மையங்கள், விஷன் லேப்கள், அதிநவீன ஆராய்ச்சி மையங்கள் மற்றும் தொழில் நிறுவனக் கூட்டாண்மைகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அத்துடன் ஹேக்கத்தான் போட்டிகள், விளையாட்டுகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் செயல்பாடுகளில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும்,” என்றார்.
இந்நிகழ்ச்சியில் முனைவர் பி.ஸ்ரீதேவி (துணை முதல்வர் & மகளிர் நலம்), முனைவர் ஆர். நடராஜன் (டீன் – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி), முனைவர் கே.வைதேகி (டீன் & தன்னாட்சி செயல்பாடுகள்), முனைவர் எம். ஹரிதாஸ் (தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி), முனைவர் கே.இளங்கோவன் (ஆண்கள் விடுதிக் காப்பாளர்), முனைவர் பி.ராணி (பெண்கள் விடுதிக் காப்பாளர்) மற்றும் பேராசிரியர் சி.ஜி.சிவகுமார் (இணை டீன் & மாணவர் விவகாரங்கள்) ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினர்.
நிர்வாகப் பிரிவு டீன் முனைவர் எஸ். சரவணன் நன்றியுரை ஆற்றினார். இந்த அறிமுக நிகழ்ச்சி பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் கல்விச் சூழல் மற்றும் வாய்ப்புகள் குறித்த தெளிவான பார்வையை மாணவர்களுக்கு வழங்கியதோடு, அவர்களின் எதிர்காலப் பயணத்தைத் தன்னம்பிக் கையுடனும் ஆர்வத்துடனும் தொடங்க நல்வழிகாட்டியாக அமைந்தது.

படிக்க வேண்டும்

spot_img