80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசத்தின் அமைதி, பாதுகாப்பு மற்றும் வேற்று மையில் ஒற்றுமைக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் “இன் காட் வி டிரஸ்ட்” என்ற பிரத்யேக சுதந்திர தின இசை ஆராதனை நிகழ்ச்சி கோவையில் விமரிசையாக நடைபெற்றது.
‘தி கோயம்புத்தூர் காஸ் பெல் என்செம்பிள்’ சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது, சுதந்திர தினத்தை மையமாக வைத்து இறைநம்பிக் கையையும் நாட்டுப்பற்றையும் இணைத்து இந்தியாவில் முதன்முறையாக முன்னெடுக்கப்பட்ட ஒரு தனித்துவமான இசை நிகழ்வாகும். பேராசிரியர் ஜே.எஸ்.கென்னடி இந் நிகழ்ச்சியை வழிநடத்தி இயக்கினார்.
அவிநாசி சாலையில் உள்ள ஒய்.டபிள்யூ.சி.ஏ அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நமது தேசத்தில் பல்வேறு கலாச்சார, மொழி வேற்றுமைகள் மற்றும் சவால்கள் இருந்தாலும், இறைவன் நாட்டைப் பாதுகாத்து வழிநடத்தி வருவதற்கு நன்றி செலுத்தும் விதமாக பல சிறப்புப் பாடல்கள் இசைக்கப்பட்டன.
தனிப்பாடல்கள், கூட்டுப் பாடல்கள் மற்றும் மார்ட்டின் லூதர், நடராஜ முதலியார், ரஸல் மால்டின் ஆகியோரின் புகழ்பெற்ற இசைப் படைப்புகள் மற்றும் “இன் காட் வி டிரஸ்ட் கேன்டாடா” ஆகியவை இதில் பாடப் பட்டன. இந்நிகழ்ச்சி நேரலையாகவும் ஒளிபரப்பப்பட்டது.
நமது 80-வது சுதந்திர தினத்தில், இந்த அழகிய தேசத்தையும் விடுதலையையும் நமக்குத் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துவதே இதன் நோக்கம். பல சவால்களுக்கு மத்தியிலும் நமது தேசத்தை இறைவன் ஒற்றுமையுடனும் அமைதியுடனும் பாதுகாத்து வருகிறார். அந்த நம்பிக்கையையும் நன்றியறிதலையும் இசையின் மூலம் வெளிப் படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் திரளான இசைப் பிரியர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சுதந்திர தின மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.



