ஸ்டேன்ஸ் பள்ளிகள் சார்பில் இந்தியாவின் 80வது சுதந்திர தின விழா, தேசப்பற்று மற்றும் எழுச்சி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஸ்டேன்ஸ் பள்ளிகளின் தாளாளர் பிலிப் ஆர்.ஜே. ஃபவுலர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து விழாவைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் மாணவ இசைக்குழுவினர் தலைமையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. விழாவின் தொடக்கமாக ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் மேல்நிலைப்பள்ளியின் மாணவர்கள் தலைவன் சாத்விக்.ஆர் தொடக்க இறை வணக்கத்தை வழங்கினார்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, ஸ்டேன்ஸ் ஐ.சி.எஸ்.சி பள்ளி, ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.சி பள்ளிகளைச் சேர்ந்த தேசிய சாரணர் படையினர் (என்எஸ்எஸ்) அணிவகுப்பு நடை பெற்றது. மாணவர்கள், ஒழுக்கம்.

கட்டுப்பாடு, ஒருங்கிணைப்பு மற்றும் தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக அணிவகுத்தனர். மாணவர்களின் நேர்த்தியான அணிவகுப்பு பார்வை யாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
சிறப்பு விருந்தினர் மலர்க் கொத்து வழங்கி முறைப்படி கௌரவிக்கப் பட்டார். தொடர்ந்து நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் இந்தியாவின் வளமான பண்பாட்டையும். “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற உணர்வையும் வெளிப்படுத்தின. மாணவர்கள் ‘விடுதலைச்சுடர் மீண்டும் ஒளிரும் போது’ என்ற தலைப்பில் சிந்தனையைத் தூண்டும் நாடகத்தை நிகழ்த்தினர்.

இதனைத் தொடாந்து தேசப்பற்று பாடல்கள் உள்ளிட்ட வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இந்நிகழ்ச்சிகள் இந்தியாவின் பண்பாட்டுப்பன்மை, சுதந்திரப் போராட்டம் மற்றும் முன்னேற்றம் நோக்கிய ஒரு தேசத்தின் எதிர்காலக் கனவுகளை எடுத்துரைத்தன.
தலைமை உரையாற்றிய பிலிப் ஆர்.ஜே.ஃபவுலர், மாண வர்களின் ஒழுக்கத்தையும் சிறப் பான கலைநிகழ்ச்சிகளையும் பாராட் டினார். இந்தியாவின் வளமான வரலாறு மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களையும், அதில், தென்னகத்தில் தமிழ்நாட்டின் பங்கினையும் எடுத்துரைத்தார். மேலும் அவர் சுதந்திரம் நேர்மை மற்றும் குடிமைப் பொறுப்பு போன்ற உயரிய மதிப்புகளைப் பேணுவது மாணவர்களின் கடமை என்பதை நினைவூட்டினார். மேலும், எதிர்கால இந்தியாவின் குடிமக்களான மாணவர்கள் நாட்டின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க வேண்டும், என்று ஊக்கமளித்தார்.

நிகழ்வில் கௌரவ பொருளாளர் டாக்டர் ஜேம்ஸ் ஞானதாஸ், தலைமை நிர்வாக அதிகாரி வி.எம்.ஜான், ஆங்கிலோ இந்தியன் பள்ளி முதல்வர் பி.ஏ.ஜான் ஸ்டீபன், ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் ஐலீன் ஜெத்ரோ, ஸ்டேன்ஸ் ஐசிஎஸ்இ பள்ளி முதல்வர் ஜெனட் ஜெயபிரகாஷ், ஸ்டேன்ஸ் இன்டர்நேசனல் ஸ்கூல் முதல்வர் ஜார்ஜினா சிம்மன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவின் நிறைவில் ஸ்டேன்ஸ் ஐ.சி.எஸ்.சி பள்ளியின் மாணவர்களின் தலைவன் நிறைவு இறைவணக்கத்தை வழங்கினார். தொடர்ந்து ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.சி பள்ளியின் மாணவர்களின் தலைவன் ஹாஷ்ஜெயின் நன்றியுரை வழங்கினார்.

ஸ்டேன்ஸ் பள்ளிகளில் நடைபெற்ற 80 வது சுதந்திர தின விழா, இந்திய சுதந்திரத்திற்காகத் தியாகம் செய்த வீரர்களுக்கு உரிய மரியாதையைச் செலுத்தும் வகையில் அமைந்ததுடன் வலிமையான ஒற்றுமையான மற்றும் முன்னேற்றம் நிறைந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைய தலைமுறையினரின் கூட்டுப் பொறுப்பையும் மாணவர்களின் ஒழுக்கம் திறமை, தேசப்பற்று, மற்றும் இந்தியப் பண்பாட்டின் மீதான அவர்களின் பெருமையை வெளிப்ப டுத்தும் வகையில் மிகச் சிறப்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.



