Homeபிற செய்திகள்மத்திய அரசை கண்டித்து சாலை மறியல்:விவசாயிகள், தொழிலாளர்கள் 79 பேர் கைது

மத்திய அரசை கண்டித்து சாலை மறியல்:விவசாயிகள், தொழிலாளர்கள் 79 பேர் கைது

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் வாழ்வாதாரத்தின் மீதான தாக்குதல், தேர்வு மோசடிகளைக் கண்டித்தும், வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கோரியும் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு அனைத்துத் தொழிற் சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் மத்திய அரசைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்க்கு ஐ.என்.டி.யு.சி. மாநில செயல் தலைவர் பி.கதிர்வேல் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் ஐ.என்.டி.யு.சி. சார்பில் ராஜகோபால், மைக்கேல் வி. ராயன், சந்திரசேகர் மற்றும் பால்ராஜ், சி.ஐ.டி.யு சார்பில் முன்னாள் துறைமுக குழு உறுப்பினர் ரசல், பாலசுப்பிரமணியன், சிவபெருமாள், எச்.எம்.எஸ். சார்பில் மாவட்டத் தலைவர் ராஜலட்சுமி, துணைத் தலைவர் ராதா ஆனந்தராஜ் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராகக் கண்டன கோஷங் களை எழுப்பியவாறு, நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போலீசார் இப்போராட்டத்தில் ஈடுபட்ட 13 பெண்கள் உட்பட மொத்தம் 79 பேரை கைது செய்து, அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப் பட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img