கோவையில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில், இந்திய அரசின் அணு சக்தி துறையின் கீழ் செயல்படும் பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனம் (IPR) சார்பில் 3 நாள் பிளாஸ்மா கண்காட்சி துவங்கியது.

கண்காட்சியில் நேரடி பிளாஸ்மா மாதிரிகள், செயல்விளக்கங்கள், விஞ் ஞானிகளுடனான கலந் துரையாடல், அறிவியல் வினாடி-வினா, கல்வி விளையாட்டுகள் மற்றும் ஆராய்ச்சித் துறை குறித்த சிறப்புரைகள் இடம் பெற்றுள்ளன.
ஆகஸ்ட் 7 வரை நடைபெறும் இந்தக் கண் காட்சியை பார்வையிட தமிழ்நாடு முழுவதும் இருந்து 3,000-க்கும் மேற் பட்ட மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும்.

தொடக்க விழாவில் பிஎஸ்ஜிஆர் கல்வி நிறுவனத் தலைவர் டாக்டர் ஆர். நந்தினி கண் காட்சியைத் தொடங்கி வைத்தார். இதில் முதல் வர் பி.பி. ஹாரதி, பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.



