fbpx
Homeபிற செய்திகள்17 வயதுக்குட்பட்டோருக்கான மாநில ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டி: திண்டுக்கல் அணி சாம்பியன்

17 வயதுக்குட்பட்டோருக்கான மாநில ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டி: திண்டுக்கல் அணி சாம்பியன்

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள ராஜன் உள்விளையாட்டு அரங்கில், 17 வயதுக்குட்பட்டோருக்கான 14-வது மாநில அளவிலான ரோல்பால் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற இப்போட்டியில், ஆண்கள் பிரிவில் திண்டுக்கல் அணி முதலிடத்தையும், கோயம்புத்தூர் அணி இரண்டாமிடத்தையும், கடலூர் மற்றும் காஞ்சிபுரம் அணிகள் மூன்றாமிடத்தையும் பிடித்தன.

பெண்கள் பிரிவில் கோயம்புத்தூர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. திண்டுக்கல் அணி இரண்டாமிடமும், திருச்சிராப்பள்ளி மற்றும் காஞ்சிபுரம் அணிகள் மூன்றாமிடமும் பெற்றன.
இதற்கிடையில், கோயம்புத்தூரில் நடைபெற்ற 17 வயதுக்கு மேற்பட்டோருக்கான மாநில ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டியில் திண்டுக்கல் மாவட்ட மாணவ, மாணவியர் அணி இரண்டாமிடம் பிடித்தது.
வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா ராஜன் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ரோல்பால் சங்க செயலாளரும், அரங்க நிர்வாகியுமான மாஸ்டர் ஆ. பிரேம்நாத் தலைமை வகித்தார். காந்திகிராமம் முன்னாள் உள்ளாட்சி மன்றத் தலைவரும் தொழிலதிபருமான டி. ஜெயராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி, வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களை பாராட்டினார்.

படிக்க வேண்டும்

spot_img