fbpx
Homeபிற செய்திகள்திருப்பூரில் அமைச்சர் மதன்ராஜா ஆய்வு

திருப்பூரில் அமைச்சர் மதன்ராஜா ஆய்வு

குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா திருப்பூர் மாநகராட்சி, அனுப்பர்பாளையம்புதூர் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம், தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பல்வேறு கடனுதவிகளை வழங்கினார்.
இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மனிஷ் நாரணவரே திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன், பொதுமேலாளர் (மாவட்ட தொழில் மையம்) கார்த்திகைவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் செம்பியநல்லூர் பகுதியில் தமிழ்நாடு மகளிர் தொழி முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அழகு நிலையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img