fbpx
Homeபிற செய்திகள்கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 139 ஆவது தொடர் ஓட்டம்

கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 139 ஆவது தொடர் ஓட்டம்

கோவை ஸ்டேன்ஸ் பள்ளியில் ஆண்டுதோறும் மாணாக்கர்களுக்கான தொடர் ஓட்டம் நிகழ்த்தப்படுவது வழக்கமாகும். 164 ஆவது ஆண்டில் பள்ளி அடியெடுத்து வைக்கும் இவ்வேளையில், இந்த ஆண்டு 139 ஆவது தொடர் ஓட்டம் சுற்றுப்புறப் பாதுகாப்பு மற்றும் நகர்புறத் தூய்மை என்பதனை மையப்படுத்தி நடைபெற்றது. இதில் திரளான மாணாக்கர்கள் பங்கேற்றனர்.
ஸ்டேன்ஸ் சகோதரப் பள்ளிகளான ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, ஸ்டேன்ஸ் ஐ.சி.எஸ்.இ. பள்ளி மற்றும் ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளும் இத்தொடர் ஓட்டத்தில் பங்கு பெற்றன. இந்நிகழ்ச்சியைப் பள்ளிச் சேர்மன் மெர்சி ஓமன் மற்றும் பள்ளித் தாளாளர் பிலீப் ஆர்.ஜெ பவுளர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.


ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் பி.ஏ.ஜான் ஸ்டீபன், ஐ.சி.எஸ்.சி. பள்ளியின் முதல்வர் ஜெனட் ஜெயப்பிரகாஷ், சி.பி.எஸ்.சி. பள்ளியின் முதல்வர் திருமதி ஐலின் ஜித்ரோ ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின்தொடக்கப் பள்ளி துணை முதல்வர் பிரியா ஷீன் மற்றும் உதவித் தலைமையாசிரியர் மார்டின் லூதர்கிங் ஆகியோர் போட்டி தொடங்குமிடத்திற்கு வருகை புரிந்து மாணவர்களுக்கு ஊக்கமூட்டினர்.
தொடர் ஓட்டத்தைப் பாதுகாப்புடன் நிகழ்த்த உடற்கல்வித் துறைத் தலைவர் கிளேட்டன் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர்களும் மற்றும் சக ஆசிரியர்களும் மாணவர்களும் தன்னார்வலர்களும் போக்குவரத்து காவலர்களுடன் இணைந்து ஒருங்கிணைப்புடன் பணி செய்தனர்.


போட்டியில் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் ஆண்கள் பிரிவில் பத்தாம் வகுப்பு ‘இ’ பிரிவு மாணவன் ஆரோன் பெமியன் கடுதோஷ் ஊல்ஸ் ஹவுஸ் 15 நிமிடம் 57 வினாடிகளில் முதல் இடத்தையும், பதினொன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு நேத்தன்அனில்டிக்குரூஸ்ஊல்ஸ் ஹவுஸ் 17நிமிடம் 4 வினாடிகளில் இரண்டாம் இடத்தையும், பன்னிரெண்டாம் வகுப்பு ‘இ” பிரிவு தர்ணீஸ் லையன்ஹவுஸ் 17 நிமிடம் 13 வினாடிகளில் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.


பெண்கள் பிரிவில் பதினொன்றாம் வகுப்பு ‘ஆ’ பிரிவு மாணவி அ.சுஜித்திரா ஊல்ஸ் ஹவுஸ் 17நிமிடம் 35 வினாடிகளில் முதல் இடத்தையும், ஸ்ரேயாசெல்லத்துரை பேந்தர்ஹவுஸ் 19 நிமிடம் 10 வினாடிகளில் இரண்டாம் இடத்தையும், ஒன்பதாம் வகுப்பு ‘இ’பிரிவு விகாசினி பேந்தர்ஹவுஸ் 19நிமிடம் 20 வினாடிகளில் மூன்றாம்இடத்தையும் பிடித்து வெற்றிக்கோப்பையையும் சான்றிதழ்களையும் தட்டிச் சென்றனர்.
நான்காம், ஐந்தாம் இடங்களைப் பிடித்தவர்களுக்கும் பள்ளித் தாளாளர் பிலீப் ஆர்.ஜெ.பவுளர் வெற்றிக் கோப்பைகளையும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினார். தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் முன்னாள் மாணவர்களுக்கும் சிற்றுண்டிவழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img