ஈரோட்டில் உள்ள ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் கீழ், அதன் தலைவர் வி. சண்முகனால் 1992-ஆம் ஆண்டு வெறும் 60 மாணவர்களுடன் ஒரு வாடகை கட்டிடத்தில் மருந்தியல் கல்லூரியாக நந்தா கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது.

இன்று, மழலையர் பள்ளி முதல் மருத்துவக் கல்லூரி வரை 20 கல்வி நிறுவனங்களை உள்ளடக்கி, 16,000க் கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 1,500 பேராசிரியர்கள், பணியாளர்களுடன் ஒரு மாபெரும் கல்வி சாம்ராஜ்யமாக இது விரிவடைந்துள்ளது. “எங்களிடம் மழலையைக் கொடுங்கள்; நாங்கள் தலைவனாகத் திரும்பத் தருகிறோம்” என்ற தாரக மந்திரத்தோடும், வெற்றியின் அடையாளமாக கழுகி னைச் சின்னமாகவும் கொண்டு நந்தா செயல்பட்டு வருகிறது.

சுகாதாரத் துறையில் புதிய மைல்கல்:
ஈரோடு மாவட்டத்தின் முதல் தனியார் மருத்துவக் கல்லூரியை கடந்த 2023-ஆம் ஆண்டு நந்தா கல்வி அறக்கட்டளை நிறுவியது. இங்கு 24 மணி நேர அவசரச் சிகிச்சை பிரிவு, சிடி ஸ்கேன், டயாலிசிஸ், காப்பீட்டுத் திட்ட வசதிகள் மற்றும் அதிநவீனத் தீவிர சிகிச்சை படுக்கைகள் கொண்ட மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதனுடன் பல் மருத்துவக் கல்லூரி, சித்தா, ஆயுர்வேதா, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரிகள், நர்சிங் மற்றும் அலைட் ஹெல்த் சயின்ஸ் போன்ற துணை மருத்துவக் கல்லூரிகளும் மிகச்சிறப்பாக இயங்கி வருகின்றன. மேலும், இங்குள்ள பிரம்மாண்ட நூலகங்களில் 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங் கள் பயன்பாட்டில் உள்ளன.

சாதனை படைக்கும் வேலைவாய்ப்புகள்:
மாணவர்களின் எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் அளித்து, நந்தா கல்வி நிறுவனங்கள் இதுவரை 208 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. நடப்பு கல்வியாண்டில் மட்டும் சிடிஎஸ், அசென்ஜர், ஹூண்டாய், ஸ்பிக் போன்ற 145-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மூலம் 1,735-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பணி நியமன ஆணைகளைப் பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.44 லட்சம் வரையிலான சம்பளப் தொகுப்பில் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

கல்வியோடு ஒழுக்கம், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த முதலாம் ஆண்டு முதலே யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் சான்றிதழ்களுடன் வழங்கப்படுகின்றன. மேலும், இக்கல்வி நிறுவனத்தில் படித்து முடித்த 17,490 முன்னாள் மாணவர்கள், தற்போதைய இளம் மாணவர்களுக்குத் தொடர்ந்து தங்களின் தொழில்முறை அனுபவங்களை வழங்கி நந்தாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர்.



