fbpx
Homeபிற செய்திகள்ரோட்டரி சார்பில் தடுப்பு ஆரோக்கியம்-கல்லீரல் ஃபைப்ரோஸ்கேன் மருத்துவ பரிசோதனை முகாம்

ரோட்டரி சார்பில் தடுப்பு ஆரோக்கியம்-கல்லீரல் ஃபைப்ரோஸ்கேன் மருத்துவ பரிசோதனை முகாம்

கோவை ராம் நகரில் உள்ள கோவை நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனையில், ரோட்டரி மாவட்டம் 3206-க்கு உட்பட்ட நான்கு ரோட்டரி சங்கங்கள் இணைந்து தடுப்பு ஆரோக்கியம் மற்றும் கல்லீரல் ஃபைப்ரோஸ்கேன் மருத்துவ முகாமை நடத்தின.ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சாய்சிட்டி, டெக்ஸிட்டி, சங்கமம், லெஜண்ட் ஆகிய சங் கங்கள் இணைந்து நடத்திய முகாமை மாவட்ட இயக்குனர் மணிவண்ணன், ஜி.ஜி.ஆர். துளசி சேது, ரோட்டேரியன் டாக்டர் ஆர். பாலமுருகன், ரோட்டேரியன் சக்திவேல் ஆகியோர் துவக்கி வைத்தனர். ரோட்டரி மாவட்ட ஆளுநர் மாருதி பங்கேற்றார்.


முகாமில் சுமார் 50 ரோட் டேரியன்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்று பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனர். ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை செலவாகும் கல்லீரல் ஃபைப்ரோஸ்கேன் பரி சோதனை, சிறப்பு சலுகையாக ரூ.1,000-க்கு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் பேசிய ரோட் டேரியன் டாக்டர் ஆர். பால முருகன், வாழ்வியல் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய தடுப்பு பரிசோதனைகள் அவசியம் என வலியுறுத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img