திருப்பூர் எல்.ஆர்.ஜி. மகளிர் கல்லூரியில், பாரத் கேஸ் நிறுவனத்தின் சார்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் பாரத் கேஸ் நிறுவன அதிகாரிகள் ஹரி, பிரவீன், கருவம்பாளையம் அறிவுத் திருக்கோவில் நிர்வாகி வீரராகவன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.போட்டிக்கு நடுவராக திருப்பூர் மாவட்ட சுவரன் மாறன் கல்வி அறக்கட்டளை மற்றும் பிரகாஷ் ஆர்ட் கேலரி நிறுவனரான டாக்டர் ஜி. தர்மராஜ் செயல்பட்டார்.
போட்டியில் சிறந்த ஓவியங்களை வரைந்த ஐந்து மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



