fbpx
Homeபிற செய்திகள்கோவை நிர்மலா கல்லூரி மாணவியர்சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

கோவை நிர்மலா கல்லூரி மாணவியர்சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் மாணவியர் சங்கம் மற்றும் அதனுடன் இணைந்த சங்கங்கள், மன்றங்களின் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்,கோவை கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநர் முனைவர் என்.செண்பக லட்சுமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.கல்லூரியின் செயலா ளர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரஸ், முதல்வர் அருட்சகோதரி முனைவர் மேரி பபியோலா ஆகியோர் முன்னிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட பல்வேறு மாணவியர் மன்றப்பொறுப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றனர். சிறப்பு விருந்தினர் என்.செண் பகலட்சுமி தம் உரையில் இளம் பெண்கள் தங்களின் தனிப்பட்ட, உடல் மற்றும் சமூகநலனுக்கு முன்னுரிமை அளித்து, அதன் மூலம் தன்னம்பிக்கை மிக்க தலைவர்களாகவும் பொறுப்புள்ள குடிமக்களாகவும் உருவெடுக்க வேண்டும் என ஊக்கப்படுத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img