கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களின் 36 ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணைகளில் 5 லட்சத்து 24 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர் தெரிவித்தார்.
மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட மலுமிச்சம்பட்டி ஊராட்சி யில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் செயல்பட்டு வரும் நாற்றங்கால் பண்ணையை ஆட்சியர் ஆய்வு செய்தார். அங்கு வேம்பு, புளி, நாவல், கொய்யா, நெல்லிக்காய், மாமரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், மாவட்டத்தின் 12 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 36 நாற்றங்கால் பண்ணைகளில் மொத் தம் 5.24 லட்சம் மரக்கன்றுகள் உற் பத்தி செய்யப்படுவதாக கூறினார். மலுமிச்சம்பட்டி நாற்றங்கால் பண்ணையில் மட்டும் 35 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
6 அடி உயரம் வரை வளர்க்கப் படும் இந்த மரக்கன்றுகள் பின்னர் சாலையோரங்கள், ஆற்றங்கரைகள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் நடவு செய்து பசுமை பரப்பை அதிகரிக்க பயன்படுத்தப்பட உள்ளன என்றும் அவர் கூறினார். ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.



