fbpx
Homeபிற செய்திகள்பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்:885 மனுக்கள் மீது தீர்வு காணகடலூர் கலெக்டர் உத்தரவு

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்:885 மனுக்கள் மீது தீர்வு காணகடலூர் கலெக்டர் உத்தரவு

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி,பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் ரேஷன் கார்டு, வேலைவாய்ப்பு, உதவித் தொகை,பட்டா மாற்றம்,வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.மொத்தம் 885 மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களை பெற்ற கலெக்டர், அவற்றை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும் விதிமுறைகளுக்குட்பட்டு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் புண் ணியகோட்டி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர்கள் (கணக்கு) தீபா, திருநாவுக்கரசு(தேர்தல்), மாவட்ட வழங்கல் அலுவலர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img