கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாணவர் சிறப்பு குறைதீர் முகாமை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்ப னவர் தொடங்கி வைத்து, 10 மாணவர்களுக்கு ரூ.2.70 லட்சம் கல்வி உதவித் தொகைக்கான காசோ லைகளை வழங்கினார்.
மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் கல்விக்கடன், கல்வி உதவித் தொகை, சான்றிதழ்கள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன. கல்வி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் அமைத் திருந்த தகவல் அரங்கு களையும் ஆட்சியர் பார்வை யிட்டார். பின்னர் அவர் பேசியதாவது: தமிழக அரசு உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் 12ம் வகுப்புக்கு பிறகு படிப்பை நிறுத்தாமல் கல்லூரி அல்லது தொழிற்கல்வியில் சேர்ந்து பயில வேண்டும். உயர்கல்வி தொடர்பான உதவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் உயர்கல்வி கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு பேசினார்.
முகாமில் 265-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 33 பேர் அரசு கலை, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி சேர்க்கை பெற்றனர். மேலும், 150-க்கும் மேற்பட் டோர் கல்லூரி சேர்க்கை தொடர்பான ஆலோ சனைகளை பெற்றனர்.
வருவாய்த்துறை சார்பில் 12 சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்விக் கடன் கோரி விண்ணப்பித்த 12 மாணவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க ஒப்புதல் அளித்தன.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, இணை இயக்குநர் (கல்லூரிக் கல்வி) செண்பகவள்ளி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



