fbpx
Homeபிற செய்திகள்அரிய மூளை புற்றுநோயை வென்ற கிளெனீகல்ஸ் மருத்துவமனை

அரிய மூளை புற்றுநோயை வென்ற கிளெனீகல்ஸ் மருத்துவமனை

சென்னை கிளெனீகல்ஸ் மருத்துவமனை, மூளையைப் பாதிக்கும் அரிய வகை ‘பிரைமரி சென்ட்ரல் நெர்வஸ் சிஸ்டம் லிம்போமா’ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 49 வயது ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த நோயாளிக்கு, மேம்பட்ட CAR-T செல் சிகிச்சை மூலம் முழுமையான குணம ளித்து மருத்துவ சாதனை படைத்துள்ளது. இந்த மருத்துவமனையில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட NexCAR19 CAR-T செல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து தீவிர சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய பன்முக மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பால் நோயாளி குணமடைந்தார்.


மருத்துவப் புற்றுநோயியல் மூத்த ஆலோசகர் டாக்டர் அருண் ரமணன், CAR-T செல் சிகிச்சை புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது, என்றார்.மருத்துவமனைத் தலைவர் டாக்டர் எஸ். நிரஞ்சனி, ஒருங் கிணைந்த செயல்பாடே இந்த வெற்றிக்குக் காரணம் என்று தெரிவித்தார்.முதன்மை நிர்வாக அதிகாரி பரத் காந்த் ரெட்டி, உலகத் தரத்திலான புற்று நோய் சிகிச்சையை இந்திய நோயாளிக ளுக்கு எளிதில் கிடைக்கச் செய்வ தில் மருத்துவமனை தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருவ தாக கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img