கோவை நிர்மலா மகளிர் கல்லூரி (தன்னாட்சி) முதுநிலை நூலக தகவல் அறிவியல் ஆய்வுத்துறை, நூலகத் துறை மற்றும் தமிழ் விக்கிப்பீடியா கூகுள் 2025- இணைந்து 04.07.2026 அன்று “தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளடக்க உருவாக்கம்” என்ற தலைப்பில் ஆசிரியர் மேம்பாட்டுத் திறன் (Faculty Development Programme) பயிற்சியில் கல்லூரியின் செயலர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரஸ், முதல்வர் அருட்சகோதரி முனைவர் மேரி பபியோலா ஆகியோர் தலைமை வகிக்க முதுநிலை நூலக தகவல் அறிவியல் ஆய்வுத்துறை, மற்றும் நூலகத் துறைத் தலைவர் அருட்சகோதரி முனைவர் ஜாக்குலின் மேரி அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
இந்நிகழ்ச்சியின் பயிற்சியாளர்களாக தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி விலங்கியல் துறைத்தலைவர் முனைவர் மாரியப்பன், சேலம் கல்வித்துறை கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன், திண்டுக்கல் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பூர்ணிமா, மயிலாடுதுறை அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் ஆகியோர் விக்கிப்பீடியாவில் தரமான கட்டுரைகள் உருவாக்குதல், தகவல்களை மேற்கோள்களுடன் பதிவேற்றுதல், இணையவழி அறிவுப் பகிர்வு, அறிவுக் களஞ்சியத்தின் அவசியம் ஆகிய தலைப்புகளில் விரிவாக எடுத்துரைத்தனர்.
இப்பயிற்சியில் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்று பயனடைந்தனர். தமிழ் மொழி மற்றும் அறிவியல் தகவல்களை உலகளவில் பரப்புவதில் தமிழ் விக்கிப்பீடியாவின் பங்களிப்பை வலியுறுத்திய ஆசிரியர் மேம்பாட்டுத் திறன் நிகழ்ச்சியானது பயனுள்ளதாக அமைந் தது. இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்புக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.



