ஈரோடு நந்தா பாலிடெகளிக் கல்லூரி யின் 29ஆம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு துவக்க விழா நடைபெற்றது.
டேட்டா பார்டன்” நிறுவனத்தின் மூத்த மனிதவள மேலாளர் வி.உதயகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.அறக்கட்டளையின் தலைவர் வி. சண்முகன் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் ஜீ. மோகன்குமார் வரவேற் றார். அறக்கட்டளையின் இணை நிர்வாக அங்கத்தினர்கள் எஸ்.திருமூர்த்தி, எஸ்.நந்தகுமார் பிரதிப் மற்றும் தொழில்நுட்ப வளாகத்தின் நிர்வாக அலுவலர் ஏ.கே. வேலுசாமி, நந்தா பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் யு.எஸ். ரகுபதி, மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் முனைவர் ச.நந்தகோபால் வாழ்த்துரை வழங்கினர்.



