fbpx
Homeபிற செய்திகள்மருத்துவர்கள் தின விழா: உயரிய ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ பெற்றார் டாக்டர் பி.எஸ்.ராஜன்

மருத்துவர்கள் தின விழா: உயரிய ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ பெற்றார் டாக்டர் பி.எஸ்.ராஜன்

மருத்துவர்கள் தினம் 2026-ஐ முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு விழாவில், கோவை, நியூ சித்தாபுதூரில் அமைந்துள்ள ELCE மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பி.எஸ். ராஜன்,MS, FACS, FICS, FMAS, DNB, Association of Alliance Clubs Internationalமற்றும் VGM Foundation இணைந்து வழங்கிய உயரிய “வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவ்விருதை, தற்போதைய இணை சுகாதாரப் பணிகள் இயக்குநர் (Joint Director of Health Services) டாக்டர் சுமதி வழங்கி சிறப்பித்தார்.
மருத்துவத்துறையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அவர் ஆற்றி வரும் அர்ப்பணிப்புமிக்க சேவை, அறுவை சிகிச்சைத் துறையில் பெற்றுள்ள சிறப்பான சாதனைகள், நோயாளிகளுக்கு கருணையுடனும் அர்ப்பணிப்புடனும் வழங்கி வரும் தரமான சிகிச்சை, தொலைநோக்கு தலைமைத்துவம் மற்றும் சுகாதாரத் துறைக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை பாராட்டும் விதமாக இவ்விருது வழங்கப்பட்டது.
இந்த விருது, கோவை சிங்காநல்லூரில் உள்ள விஜிஎம் மருத்துவமனை அரங்கில் நடைபெற்ற மருத்துவர்கள் தின விழாவில், மருத்துவத் துறையின் முன்னணி நிபுணர்கள், சுகாதாரத் துறை தலைவர்கள், சமூக சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள், Association of Alliance Clubs International அமைப்பின் நிர்வாகிகள், டாக்டர் வி.ஜி.மோகன் பிரசாத் அவர்களும் அவரது குடும்பத்தினரும் முன்னிலையில் வழங்கப்பட்டது.


தனது சிறப்புமிக்க மருத்துவப் பயணத்தில், நேர்மையான மருத்துவ நடைமுறை மற்றும் உயர்தர சிகிச்சை சேவையின் மூலம் ஆயிரக்கணக்கான நோயாளிகளின் நம்பிக்கையை டாக்டர் ராஜன் பெற்றுள்ளார். குடலியல் மற்றும் லேபராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணராக உயர்ந்த மதிப்பைப் பெற்றுள்ள அவர், கருணையுடனும் மனிதநேயத்துடனும் தரமான மருத்துவ சேவையை தொடர்ந்து வழங்கி வருவதோடு, இளம் மருத்துவர்களுக்கு வழிகாட்டியாகவும், சமூக நலனுக்காகவும் சிறப்பான பங்களிப்பை ஆற்றி வருகிறார்.விருதைப் பெற்ற பின்னர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த டாக்டர் பி.எஸ்.ராஜன், இந்த உயரிய அங்கீகாரத்தை தனது நோயாளிகள், சக மருத்துவர்கள், குடும்பத்தினர் மற்றும் ELCE மருத்துவமனையின் ஒட்டு மொத்த குழுவினருக்கும் அர்ப்பணிப்பதாகக் கூறினார். தனது மருத்துவப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களின் அசைக்க முடியாத ஆதரவும் நம்பிக்கையும் தான் இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img