ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ரீடு சமூக சேவை நிறுவனம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.ரீடு நிறுவனத்தின் இயக்குனர் கருப்புசாமி தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி வரவேற்றார்.
சத்தியமங்கலம் நகர் மன்ற தலைவர் ஜானகி, பெண்கள் உரிமைகள் ஆணைய உறுப்பினர் கீதா நடராஜன், ஆணைக்கொம்பு மண்டப உரிமையாளர் ஆணைக்கொம்பு ஸ்ரீராம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் செயலாளர் திரு. முத்து, சத்தியமங்கலம் ஷெரோஸ் ஒய்ஸ் மகளிர் சங்கத்தின் தலைவர் சித்ரா சரவணன் மற்றும் திரைப்பட துணை இயக்குனர் கல்பனா அம்பேத்கர் ஆகியோர் உரையாற்றினர்.
பின்னர் கருப்புசாமி மொத்தம் ரூ10.51 லட்சம் கல்வி உதவித்தொகையை 222 மாணவர்களுக்கு வழங்கினார்.
ரீடு அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்களான குருசாமி, கிருஷ்ணவேணி, சுந்தரி, ரீடு நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் அன்னக்கொடி பங்கேற்றனர்.



