கோவையில் செயல்படும் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, உலகத் தர மருத்துவத் தொழில்நுட்பம், அனுபவமிக்க நிபுணர்கள் மற்றும் நோயாளி மையப்படுத்தப்பட்ட சேவையால் முன்னணி சிகிச்சை மையமாக திகழ்கிறது. இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள், எலும்பு மஜ்ஜை மாற்று, கத்தியில்லா மூளைச் சிகிச்சை, மேம்பட்ட நுரையீரல் மற்றும் நரம்பியல் சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன மருத்துவ வசதிகள் இங்கு உள்ளன.

JCI, NABH, CARF மற்றும் SRC உள்ளிட்ட தேசிய, சர்வதேச தர அங்கீகாரங்களைப் பெற்றுள்ள மருத்துவமனை,
உலகத் தர சிகிச்சையை வழங்குவதில் உறுதியாக செயல்படுகிறது. அதிநவீன தொழில்நுட்பம், திறமையான மருத்துவக்குழு மற்றும் நவீன தீவிர சிகிச்சைப் பிரிவு மூலம் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை வழங்கப்படுவதாக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் மாதேஸ்வரன் தெரிவித்தார்.



