கோவை செட்டிபாளையம் கரி மோட்டார்ஸ் ஸ்பீடு வேயில், தி சென்னை மொபைல்ஸ் சார்பில் ஒப்போ நிறுவனத்தின் புதிய மொபைல் போன்கள் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதில், ஓப்போ நிறுவன தலைமையகத்தின் கணக்குப்பிரிவு தலைவர் ரயன், தி சென்னை மொபைல்ஸ் நிர்வாக இயக்குனர் சம்சு அலி, இணை நிர்வாக இயக்குனர் ஆதில், oppo நிறுவன தமிழக முதன்மை நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் அக்கவுண்ட் ஹெட் வில்லி ஆகியோர் இணைந்து புதிய ரக மொபைல்களை வெளியிட்டனர். இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு முன்னணி நிறுவனங்களை சேர்ந்த சொகுசு கார்களின் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.



