fbpx
Homeபிற செய்திகள்போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி : 200 மாணவர்கள் பங்கேற்பு

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி : 200 மாணவர்கள் பங்கேற்பு

கோவை கரும்புக்கடை பகுதியில், உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை மற்றும் அர்-ரஹ்மான் அகாடமி கட்டணமில்லா கல்வியகம் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் பேரணி நடைபெற்றது.
பேரணியை கரும்புக்கடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்துரு மற்றும் மாநகராட்சி 86-வது வார்டு கவுன்சிலர் அகமது கபீர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

அர்-ரஹ்மான் அகாடமி நிர்வாகிகள் அப்துல் ஹக்கீம், ஜுனைது உசேன், சிராஜ்தீன், அப்துல் சத்தார், ஜுபைர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் 200-க் கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று, போதைப்பொருளின் தீமைகளை எடுத்துரைக்கும் பதாகைகள் ஏந்தியும், விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியும் கரும்புக்கடை முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img