fbpx
Homeபிற செய்திகள்கோவையில் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவி

கோவையில் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவி

கோவை மாநகராட்சி கலைய ரங்கில் கெப்சரா பவுண்டேஷன் சார்பில், திருநங்கைகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ‘மதிலை தாண்டு’ நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், மாநக ராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, பின்னணி பாடகர் வி.வி. பிரசன்னா உள்ளிட்டோர் பங்கேற்று, திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், சாத னையாளர்களுக்கு விருதுகளையும் வழங்கினர்.


அமைச்சர் சம்பத்குமார் பேசுகையில், “சவால்களை கடந்து முன்னேறும் ஒவ்வொரு திருநங்கையும் சாதனையாளரே; தேவையான உதவிகளை உரிமையுடன் கேட்கலாம்,” என்றார். பாடகர் வி.வி.பிரசன்னா, திருநங்கைகளின் வாழ்வியலை மையமாகக் கொண்ட இசை ஆல்பம் தயாரிக்கப்படுவதாகவும், அதில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தார். கெப்சரா பவுண்டேஷன் நிறுவனர் மேரி ஜெனிட்டா, திரு நங்கைகளின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத் துக் கான நலத்திட்டங்கள் தொட ரும் என்றார். அரசு பள்ளி மாணவர் களுக்கும் நோட்டுப் புத்தகங்கள், பள்ளிப்பைகள் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img