fbpx
Homeபிற செய்திகள்கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 புதிய திட்டங்கள் துவக்கம்

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 புதிய திட்டங்கள் துவக்கம்

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஸ்வர்கா பவுண் டேஷன் சார்பில் 4 புதிய திட்டங்கள் துவக்கப்பட்டன. கோவையில் இன்று நடைபெற்ற துவக்க விழாவுக்கு பிற்ப டுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி. சம்பத் குமார் தலைமை வகித்தார். ஸ்வர்கா பவுண்டேஷன் நிர்வாக அறங் காவலர் சொர்ணலட்சுமி குருபிரசாத் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் பவன் குமார் கிரியப்பனவர், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்காக சாய்வுத்தள வசதியுடன் கூடிய பிரத்யேக வாடகை வாகன சேவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாநகராட்சி தூய்மைப் பணியா ளர்களால் நடத்தப்படும் உள்ளடக்கிய உணவகம், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கும் திட்டம் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களுக்கும் ரயி லின் உள்ளே செல்லக்கூடிய காப்புரிமை பெற்ற சக்கர நாற்காலி மற்றும் சாய்வுத்தளங்களை வழங்கும் திட்டம் ஆகியவை துவக்கி வைக்கப்பட்டன.
இது குறித்து ஸ்வர்கா பவுண்டேஷன் நிர்வாகம் கூறுகையில், 2014-ம் ஆண்டு கோயம்புத்தூரில் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை, நரம்புத் தசை குறைபாடுகள் மற்றும் பல்வேறு மாற்றுத்திறன்களால் பாதிக்கப்பட் டவர்களுக்கு ஆதரவளித்து வருகிறது.

மேலும், சமூகப் பணிகளுக்காக இந்திய குடியரசுத் தலைவரின் சர்வஷ்ரேஷ்ட திவ்யாங்ஜன் விருது (2023), தமிழக முதல்வரின் சிறந்த சமூகப் பணியாளர் விருது (2025), தமிழக ஆளுநரின் சிறந்த சமூக சேவை விருது (2025) உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளோம், என்றனர்.

படிக்க வேண்டும்

spot_img