கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணா சமுதாய மன்றத்தில் மாவட்ட வேளாண்மைத் துறை சார்பில் மாவட்ட அளவிலான வேளாண் கண்காட்சி நடை பெற்றது. இக்கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் திறந்து வைத்து, பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங் குகளை பார்வையிட்டார்.
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் உள் ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப் பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை ஆய்வு செய்த ஆட்சியர், அதிகாரிக ளிடம் திட்டங்கள் குறித்து விளக்கம் கேட்டறிந்து, விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.
தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் வேளாண்மைத் துறை அதிகாரிகள் மற்றும் குளித்தலை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ரூ.2.12 லட்சம் மதிப்பிலான வேளாண் நலத்திட்ட உதவிகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
அப்போது விவசாயிகளிடையே பேசிய மாவட்ட ஆட்சியர் முத்துக் குமரன், கரூர் மாவட்டத் தில் பெரும்பாலான பகுதிகள் மானா வாரி நிலங்களாக உள்ளதாகவும், பல விவசாயிகள் நிலங்களை தரிசாக வைத்திருப்பதை கவனித்துள்ள தாகவும் தெரிவித்தார்.
வறட்சியால் மனமுடைந்து விவசாயத்தை கைவிடாமல், மரப்பயிர் சாகுபடிக்கு விவசாயிகள் மாற வேண்டும் என்றும், இதன் மூலம் ஆண்டுதோறும் நிலையான வருமானம் பெறும் வாய்ப்பு உருவாகும் என்றும் அவர் கூறினார்.
மேலும், கரூர் மாவட்டத்தை பசுமை நிறைந்த வேளாண் மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், ரசாயன கலப்பு இல்லாமல் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பழங்கள் மற்றும் கனிகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால், இயற்கை வேளாண்மையை நோக்கி விவசாயிகள் தயாராக வேண்டும் என கேட்டுக் கொண்டார்.



