fbpx
Homeபிற செய்திகள்8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18.36 லட்சத்தில் நவீன செயற்கை கால்கள் வழங்கிய ஆட்சியர்

8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18.36 லட்சத்தில் நவீன செயற்கை கால்கள் வழங்கிய ஆட்சியர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர் பொதுமக்க ளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், முதல மைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 8 பயனா ளிகளுக்கு ரூ.18.36 லட்சம் மதிப்பிலான நவீன செயற்கைக் கால்களை ஆட்சியர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் முதி யோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டு மனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.

இதில் இலவச வீடு கோரி 46 மனுக்கள், வரு வாய்த் துறை தொடர்பாக 269 மனுக்கள், வேலை வாய்ப்பு கோரி 21 மனுக்கள் மற்றும் பிற கோரிக் கைகள் தொடர்பாக 208 மனுக்கள் என மொத்தம் 544 மனுக்கள் பெறப்பட் டன.
மனுக்களை சம்பந் தப்பட்ட துறை அலுவலர் களிடம் வழங்கிய ஆட் சியர், அவற்றின் மீது நிர்ணயிக்கப்பட்ட காலத் திற்குள் விரைந்து நடவ டிக்கை எடுக்குமாறு அறிவு றுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப. நாராய ணன், மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் நல அலுவலர் லட் சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆனந்தகு மார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மணி மேகலை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார்,
மாவட்ட வழங்கல் அலுவலர் விஸ்வநாதன் உள்ளிட்ட அரசு அலு வலர்கள் கலந்து கொண் டனர்.

படிக்க வேண்டும்

spot_img