fbpx
Homeபிற செய்திகள்கோவையில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள ‘ப்ராடக்ட்ஸ் ஆஃப் பிஎஸ்ஜி ப்ராடக்ட்ஸ்’ கண்காட்சி இணையதளம், கையேடு...

கோவையில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள ‘ப்ராடக்ட்ஸ் ஆஃப் பிஎஸ்ஜி ப்ராடக்ட்ஸ்’ கண்காட்சி இணையதளம், கையேடு வெளியீடு

பிஎஸ்ஜி அண்ட் சன்ஸ் அறக்கட்டளையின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பிஎஸ்ஜி நிறுவனங்களின் முன்னாள்மாணவர்களான தொழில் முனை வோரால் உருவாக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தும் ஒரு தனித்துவமான கண்காட்சியான ‘Products of PSG Products’- தொடர்பான பணிகள் தொடக்க விழா கோவை ஹோட்டல் ரேடிசன் புளூவில் நேற்று மாலை நடைபெற்றது.

முன்னாள் மாணவர்களின் உற்பத்தி, கல்வி, பொறியியல், சுகாதாரம், தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறை சார்ந்த பங்களிப்புகளை வெளிப் படுத்தவுள்ள முதன்மைக் கண் காட்சியானது, நடப்பு ஆண்டு (2026) டிசம்பர் மாதம் 9 முதல் 13-ஆம் தேதி வரை கொடிசியா வளாகத்தின் ஜிவி மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களில் பயின்ற முன்னாள் மாணவர்கள் தொடங்கிய நிறுவனங்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இக்கண்காட்சி திட்டமிடப்பட் டுள்ளது. இத்தொடக்கவிழாவில் பிஎஸ்ஜி அண்ட் சன்ஸ் அறக் கட்டளையின் தலைவர் ஜி.ஆர்.கார்த்திகேயன் முதன்மை விருந்தினராகவும், ப்ரிகால் நிறுவனத் தலைவர் விஜய் மோகன் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றனர்.

அறக்கட்டளையின் அறங்காவலர் எல்.கோபால கிருஷ்ணன் இவ் விழாவிற்குத் தலைமை தாங் கினார். இவ் விழாவின் போது, கண்காட்சி யின் அதிகாரப் பூர்வ இணையத ளம் மற்றும் கையேடு முறைப் படி வெளி யிடப்பட்டு, அதற்கான தொலை நோக்குத்திட்டமும் காலக்கோடும் விவரிக்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img