fbpx
Homeபிற செய்திகள்கோவை பெரியார் அறிவுலக மைய இறுதிக்கட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா...

கோவை பெரியார் அறிவுலக மைய இறுதிக்கட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை காந்திபுரத்தில் ரூ.301 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பெரியார் அறிவுலகம் மையத்தின் கட்டுமானப் பணிகளை பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

ஆய்வின்போது, நெடுஞ்சாலை கள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை அரசு செயலாளர் டாக்டர் செல் வராஜ், பொதுப்பணித்துறை முதன் மைச் செயலாளர்
ஷுன்சொங்காம் ஜடக் சிரு, மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியப்பனவர், எம்.எல்.ஏ. சுகுமார், முதன்மை தலைமைப் பொறியாளர் மணிவண்ணன், தலைமைப் பொறியாளர் ரங்கநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர் ஆதவ் அர் ஜுனா கூறியதாவது:

காந்திபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் பெரியார் அறிவுலகம் மையம் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் உருவாக்கப்பட்டு வருகிறது. தரைத்தளத்தில் கலை அரங்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

முதல் தளத்தில் அறிவியல் மையம், இரண்டாம் தளத்தில் குழந்தைகள் நூலகம் மற்றும் ஆங்கில நூலகம், மூன்றாம் தளத்தில் போட்டித் தேர்வுகளுக்கான நூலகம் மற்றும் தலைமை நூலகர்
அலுவலகம், நான்காம் தளத்தில் தமிழ் நூலகப் பிரிவு மற்றும் பருவ இதழ்கள் பிரிவு அமைக்கப்பட் டுள்ளன.

மேலும், ஐந்தாம் மற்றும் ஆறாம் தளங்களில் ஆங்கில நூலகப் பிரிவு மற்றும் தொழில்முனைவோர் மையம், ஏழாம் தளத்தில் அறிவியல் மையம் மற்றும் மின்னணு நூலகம் இடம் பெறுகின்றன.
மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் பல் வேறு நூல்கள், நவீன வசதிகள், பயணிகள் மின்தூக்கி கள், படிக்கட்டுகள், ஓய்வு அறைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட் டுள்ளன. கார் மற்றும் இருசக்கர வாகன நிறுத்துமிட வசதியும் உரு வாக்கப்பட்டுள்ளது.

தற்போது கட்டுமானம், மின்சார வசதிகள், அறிவியல் மையம் மற்றும் வெளிப்புற மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளன. அவை விரைவில் நிறைவு செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img