fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் ஃப்ரண்ட்லைன் அகாடமி பள்ளி, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அபார சாதனை

திருப்பூர் ஃப்ரண்ட்லைன் அகாடமி பள்ளி, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அபார சாதனை

திருப்பூர், கோவில் வழி பெருந்தொழுவு சாலையில் உள்ள தி ஃப்ரண்ட்லைன் அகாடமி பள்ளி மாணவர்கள் 12 – ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்த ஆண்டு 594 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பள்ளியின் மாணவி சஷ்டிகா வருணவி 594 மதிப்பெண்களைப் பெற்று முதல் இடத்தைப் பெற்றுள்ளார். 592 மதிப்பெண்களைப் பெற்று தர்ஷினி இரண்டாம் இடத்தையும் 587 மதிப்பெண்களைப் பெற்று வைஷ்ணவி மூன்றாம் இடத் தையும் பெற்றுள்ள னர். பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

மேலும் தேர்வு எழுதிய 133 மாணவர்களில் 51 மாணவர்கள் பல் வேறு பாடங்களில் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ள னர். 25 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் 99/100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவர்களுக்கும், பயிற்சியளித்த ஆசிரியர்க ளுக்கும் பள்ளியின் தாளா ளர் டாக்டர். சிவசாமி, செயலாளர் டாக்டர். சிவகாமி இயக்குனர் சக்தி நந்தன், இணை செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் பள்ளியின் முதல்வர் டாக்டர். வசந்தராஜ் ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டுகளையும் வாழ்த் துகளையும் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img