fbpx
Homeபிற செய்திகள்கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

தேர்தல் நன்னடத்தை விதிகள் முடிவடைந்த நிலையில், நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இதில் பொதுமக்கள் அளித்த 201 மனுக்கள் மீது தீர்வு காண கலெக்டர் உத்தரவிட்டார்.

தமிழக சட்டமன்றதேர்தல் முடிவடைந்த நிலையில்,தேர்தல் நன்னடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டது. இதையடுத்து கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இதில் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, வீட்டு மனைப்பட்டா, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அளித்தனர். இதில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 201 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவ லர்களுக்கு உத்தரவிட்டார்.

மொத்தம் நேற்று 201 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி மாவட்ட வருவாய் அலுவலர் கோ.புண்ணிய கோட்டி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும் கூடுதல் கலெக்டருமான பிரியங்கா, சிதம்பரம் சப்-கலெக்டர் (கணக்கு) தீபா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) முருகேசன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் குமாரராஜா, தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) தனலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலர் தமிழ்கனி, விருத் தாசலம் கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா மற்றும் அனைத் துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img