fbpx
Homeபிற செய்திகள்கோவையில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்

கோவையில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்கு எண்ணிக்கை தொடர் பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோ சனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் க.கிரியப்பனவர் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவ லர்கள் நாராயணன், விஜயராஜ் (டிட்கோ), மாவட்ட ஆட்சிய ரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) மகேஸ்வரி, வட்டாட்சியர் (தேர்தல்) தணி கைவேல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்த தாவது: கோவை மாவட்டத்தில், 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் 04.05.2026 அன்று காலை 8.00 மணிக்கு அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் எண்ணப்படவுள் ளது. வேட்பாளர்கள், முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் படிவம் எண்-18ஐ முறையாக பூர்த்தி செய்து புகைப்படத்துடன் கூடிய க்யூஆர் கோட் அடிப்படையிலான அடையாள அட்டையினை தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் பெற்றிருக்க வேண்டும். வாக்கு எண்ணும் அறையில் முகவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வழியாக சென்று தொடர்புடைய மேஜையின் அருகில் அமர வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் குடிநீர், உணவு, மருத்துவ மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை துவங்குவதற்கு முன்னதாக ஆர்.ஓ முன்னி லையில் உறுதிமொழி எடுக்கபட வேண்டும்.

வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்பட்ட முகவர்கள் செல்போன் எடுத்து வர அனுமதியில்லை. வாக்குச்சா வடி வாரியாக வேட்பாளர்கள் பெறப்பட்ட வாக்குகள் விபரங் கள் டிஸ்ப்ளே செய்யப்படுவ தனை சூபர்வைசர் தெரிவிப்பார். இதனை பார்வையிட ஒவ்வொரு மேஜைக் கும் மேக்ரோ அப்சர்வர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேட்பாளர் சுற்றுவாரியாக பெறப்பட்ட வாக்குகள் விபரங் களை குறித்து முகவர்களின் ஒப்பம் பெறப்பட்ட பின்னரே ஆர்.ஓ மேஜைக்கு அனுப்பப்ப டும்.

வாக்கு எண்ணும் மையத்தில் ஏதேனும் சந்தேகம் எழுமாயின் ஸிளி-வின் தேர்தல் நடத்தும் அலுவலர் கவனத்திற்கு கொண்டு செல்லலாம். அவர் முகவரின் கோரிக்கையை பரிசீலனை செய்து முடிவு செய்வார். வாக்கு எண்ணப்படுவதை அமைதியான முறையில் நடைபெற்றிட முகவர்கள் ஒவ்வொருவரும் தேர்தல் நடத்தும் அலுவலருடன் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img