திருப்பூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய மண்டல அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் திரு.அஜய்குமார் ஸ்ரீவஸ்தவா அவர்கள் திறந்து வைத்து குத்து விளக்கேற்றியபோது எடுத்த படம். நிகழ்வில் வங்கியின் கோவை மண்டல பொது மேலாளர் கே.வேலாயுதம், திருப்பூர் முதன்மை மண்டல மேலாளர் எஸ்விபி.சங்கர், ஈரோடு முதன்மை மண்டல மேலாளர் எஸ்.திருமுருகன் மற்றும் வங்கி அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.



