சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மலர் மருத்துவமனை, இதய வால்வு குறைபாட்டிற்குச் சிகிச்சையளிக்கும் ‘டாவி’ முறையையும், இதயத் துடிப்பைச் சீராக்கும் வயர் இல்லாத இரட்டை அறை பேஸ்மேக்கர் பொருத்தும் முறையையும் ஒரே நோயாளிக்கு வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
ஏற்கனவே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 75 வயது மூதாட்டி ஒருவ ருக்கு, கடுமையான மூச்சுத்தி ணறல் ஏற்பட்டு அன்றாடச் செயல்பாடுகள் பெருமளவு பாதிக்கப்பட்டன. தொடர்ந்து, அவரது இதயத்தின் முக்கிய வால்வு கடுமையாகச் சுருங்கியிருப்பதும், இதயத்தின் மின்துடிப்பு கடத்தப்படுவதைப் பாதிக்கும் ‘2:1 ஏவி பிளாக்‘ என்ற கோளாறு இருப்பதும் கண்டறியப்பட் டது. நோயின் தீவிரம் அறிந்து முதுநிலை இடையீட்டு இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் மதன் மோகன் தலைமை யிலான மருத்துவக் குழுவினர், திறந்தநிலை இதய அறுவை சிகிச்சைக்குப் பதிலாக, முழுமையாகக் கதீட்டர் மூலம் தோலின் வழியே செய்யப்படும் தழும்புகளற்ற நுண்துளை சிகிச்சை முறையைத் செய்தனர். திறந்தநிலை அறுவை சிகிச்சை இன்றி, காலில் உள்ள இரத்தக் குழாய் வழியாகவே இந்த இரண்டு செயல்முறைகளும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டன. இந்த நவீன சிகிச்சை முறையின் மூலம், சிகிச்சைக்குப் பிறகு 48 மணி நேரத்திற்குள் நோயாளி மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இச்சாதனை குறித்து டாக்டர் மதன் மோகன், அறுவை சிகிச்சை இல்லாத இதய மருத்துவத்தில் இது ஒரு புதிய மைல்கல்லாகும்,” என்றார். எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மலர் தலைமைச் செயல் அதிகாரி வேணுகோபால் பட், அதிக ஆபத்துள்ள நோயாளிகளுக்கு இந்த ஒருங்கிணைந்த சிகிச்சை முறை பெரும் நம்பிக்கையை அளிக்கிறது,” என்றார்.



